தமிழக அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உதவித் தொகைகள், ஊக்கத் தொகைகள் ஆகியவை தடையின்றி கிடைக்கச் செய்வதற்காக இத்திட்டம் தொடங்கப்படுகிறது.

மேலும், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆகியவை ஆறாம் வகுப்பிலேயே தரப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.