தமிழகத்தில் உள்ள 441 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 39 வடிவங்களில் ஜாதிய பாகுபாடு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகள் குறித்து 36 மாவட்டங்களில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் ஆய்வு நடத்தி ஆய்வறிக்கை வெளியிட்டது.

இதில் ஆசிரியர்கள் இடையே தீண்டாமை பார்ப்பது, தலித் மாணவர்களுக்கு தண்டனை அதிகம் தருவது , 15 பள்ளிகளில் கழிவறைகளை தலித் மாணவர்களை கொண்டு சுத்தம் செய்வது, 19 பள்ளிகளில் குடிநீர் குடிக்க வெவ்வேறு டம்ளர்களை பயன்படுத்தப்படுகின்றனர், 12 பள்ளிகளில் விளையாட அனுமதிக்கும் நேரத்தில் பாகுபாடு காட்டப்படுகிறது உள்ளிட்ட கொடுமைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.