தமிழகம்  முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் டிசம்பர் 10-ஆம் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி நிறைவடையும் நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9-ம் தேதி தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதி நிறைவடைந்தது. இன்றுடன் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுகள் நிறைவடையும் நிலையில் மாணவர்களுக்கு நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை. அதன்படி நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ஜனவரி 2-ம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும். இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேர்வுகள் ஜனவரி மாதத்தில் நடைபெறும் என்று தெரியாமல் வெளிவந்த நிலையில் தற்போது அதனை பள்ளி கல்வித்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அதன்படி ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கும்போது மேற்கண்ட 3 மாவட்டங்களிலும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.