தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 21, 722 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. காச நோயை ஒழிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காசநோய் ஒழிப்பு திட்ட பணிகள் மாநிலம் முழுவதும் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிகிச்சை நெறிமுறைகளின் படி அவர்களது வீடுகளிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டும் தேவைப்படுபவர்களுக்கு நடமாடும் ஊடுகதிர் கருவிகளை அவர்களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி ஊடுகதிர் படம் எடுக்கப்படும் வருகின்றது.

இந்த நிலையில் நிகழ்வாண்டில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுகளை ஆய்வு செய்த போது நாடு முழுவதும் 5.15 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு காச நோய் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 21,722 பேருக்கு அந்த நோயின் பாதிப்பு இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை எட்டு சதவீதம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது சற்று குறைவாகவே உள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.