இந்தியாவில் ஆக்ரா, வாரணாசி,அகமதாபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட நூல் நகரங்களில் ஸ்மார்ட் சிட்டிகள் ஆக மாற்றும் திட்டத்தை அல்லது 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்கள் வாழ்க்கைக்கு தேவையான நவீன வசதிகள் அனைத்தும் செய்யப்படும்.

இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு மற்றும் வேலூர் ஆகிய 8 நகரங்கள் மற்றும் போபால், இந்தூர், வாரணாசி மற்றும் ஆக்ரா உட்பட 22 நகரங்களின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. வருகின்ற ஏப்ரல் மாதம் இந்த 22 நகரங்களும் ஸ்மார்ட் சிட்டிகளாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 78 நகரங்களில் பணியும் இன்னும் நான்கு மாதங்களுக்குள் செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.