சென்னை ஐஐடியில் மாணவ மாணவிகள் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சமூகத்திற்கு சாதகமாகும் வகையில் புத்தாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் சார்பாக ஒவ்வொரு வருடமும் மாணவ மாணவிகள் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தி வருகிறார்கள். அதன்படி நடப்பு ஆண்டில் 77 தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை 800 மாணவ மாணவிகள் கொண்ட குழுவினர் காட்சிப்படுத்தினர்.

இதில் கடற்கரை சுத்தம் செய்யும் ரோபோ,காடுகளை வளர்க்கும் ட்ரோன் மற்றும் தானியங்கி வாகனங்கள் உள்ளிட்டவை இடம்பெற்று இருந்தன. மேலும் இந்த கண்டுபிடிப்புகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் அதனால் என்ன மாதிரியான பயன்கள் கிடைக்கும் என்று மாணவர்கள் விளக்கினர்.