தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் விதமாக அரசு சார்பாக உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

இந்த உதவி தொகையை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து ஐந்து வருடங்கள் ஆகியும் வேலை கிடைக்காமல் உள்ளவர்கள் பெறலாம். இதனை பெறுவதற்கு வயதுவரம்பு பொது பிரிவினருக்கு 40க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த உதவி தொகை அவரவர் கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப வழங்கப்படும். குறிப்பாக பட்டதாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் வரை மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்படும். இதனை பெறுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.