ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் பூங்காவில் சுமார் 470 ஏக்கரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன தொழிற்சாலை அமைய உள்ளது. இது தமிழகத்தில் முதன் முறையாக அமையும் அதிநவீன உற்பத்தி திறன் கொண்ட வாகன தொழிற்சாலையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை சுமார் 9000 கோடி செலவில் அமைக்கப்பட இருக்கிறது.

இந்த ஆலையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த புதிய தொழிற்சாலை அமைய முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய நிலையில் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் முகவரி என்று பெருமிதம் தெரிவித்தார்.