தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்காக பயனாளர்களை தேர்வு செய்வதற்கான விதித்துறை மற்றும் வருவாய் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி PHH என்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைதாரர்கள், PHH -AAY என்ற அந்தியோதயா அன்னை யோஜனா திட்ட அட்டை, அதாவது 35 கிலோ அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்க வாய்ப்பு உள்ளது. குடும்பத் தலைவிக்கு தான் உரிமை தொகை என்பதால் குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகளிர் உரிமை தொடர்பாக முதல்வர் என்ன சொன்னாரோ அது நடக்கும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் மார்ச் 20ஆம் தேதி தொடங்க உள்ள மாநில பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகுவது உறுதியாகி உள்ளது. மேலும் எந்தெந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது என்பது குறித்து தற்போது கணக்கெடுப்பு நடப்பதாகவும் கூறப்படுகிறது.