மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசே மாநில கல்விக் கொள்கை உருவாக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த புதிய மாநில கல்வி கொள்கை எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமைக்கப்படும் என்றும் வளர்ந்த வரும் தொழில்நுட்ப வளர்ச்சியை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மாநில கல்வி கொள்கை உருவாக்கம் செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் அவர்களின் தலைமையில் 13 பேர் கொண்ட குழு ஒன்றை தமிழக அரசு உருவாக்கியது.

இந்த குழுவில் பல அதிகாரிகள் மற்றும் உளவியலாளர்கள் என பலரும் உள்ளனர். தற்போது மாநில கல்விக் கொள்கை குழுவில் புதிதாக இரண்டு உறுப்பினர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 13 பேருடன் இயங்கும் இந்த குழு அடுத்த ஆண்டிற்குள் அறிக்கை அளிப்பார்கள் என்றும் அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு கல்வித் திட்டம் மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களின் தேவையை கருதி ஒரு வருடமாக நடத்தப்பட்டு வந்த ஆய்வுகளை நான்கு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.