தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது புதிதாக 1670 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். அதன்படி 544 ரேஷன் கடைகளும், 1126 பகுதி நேர ரேஷன் கடைகளும் திறக்கப்பட்டுள்ளது.

அதாவது மேலூரில் புதிய ரேஷன் கடை அமைத்து தருமாறு சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ பெரிய புள்ளான் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் பெரிய கருப்பன் தமிழகத்தில் புதிதாக 1670 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக பதில் வழங்கினார். மேலும் மேலூரிலும் புதிய ரேஷன் கடை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்துள்ளார்.