தமிழகத்தில் பால் மற்றும் தயிர் உள்ளிட்ட பொருள்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஐயா என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில், தமிழகத்தில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை கண்ணாடி பாட்டில்கள் அல்லது டெட்ரா பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மூலமாக பால் விற்பதற்கு அரசு தடை விதிக்க வேண்டும். இந்த கோரிக்கையை ஏற்று பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு கண்ணாடி பாட்டில்கள் அல்லது டெட்ரா பாக்கெட்டுகள் மூலமாக பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் விலை உயர்வை தவிர்க்க முடியாதது ஆகிவிடும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றன.