
தமிழகத்தில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான உணவு மானியத்தை தற்போது அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி விடுதியில் தங்கி படிக்கும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவர்களுக்கான உணவு மானிய தொகையை அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு இதுவரை 1000 ரூபாய் உணவு மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை 1400 ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது.
இதேபோன்று கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாய் உணவு மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அதனை 1500 ரூபாயாக உயர்த்தியுள்ளது. மேலும் இந்த துறையின் கீழ் மாநில அளவில் 1453 பள்ளி கல்லூரிகள் இருக்கிறது. இங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தங்கி படிக்கும் நிலையில் இதன் மூலம் அவர்கள் பயன்பெறுவார்கள்.