தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்ற நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அந்த விழாவில் கலந்து கொண்டு ஆசிரியர்களை பாராட்டி விருதுகளை வழங்கினார். பிறகு பேசிய அமைச்சர், ஆசிரியர் இல்லை என்றால் இன்று மேடையில் நாங்கள் இல்லை, நீங்கள் இல்லை என்றால் சமுதாயத்தில் சிறந்து விளங்கிட இயலாது என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பள்ளி கல்வித்துறை ஆசிரியர் மற்றும் மாணவர்களை நலனுக்காக பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி பள்ளிகளில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்களின் விருப்பப்படி புடவை மற்றும் சுடிதார் அணியலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.