
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2-ம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தற்போது பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருப்பதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் முதலில் கோடை விடுமுறை காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் பள்ளிகள் திறப்பு தேதி நீடிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இதன் காரணமாக பள்ளி கல்வித்துறை 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டவட்டமாக பள்ளிகள் ஜூன் இரண்டாம் தேதி திறக்கப்படும் என மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்காக பள்ளிக் கல்வித்துறை சில முக்கிய வழிகாட்டுதல்களையும் வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி மதிய உணவு இடைவேளை முடிந்த பிறகு சிறார் பருவ இதழ் படிக்க வைக்க வேண்டும்.
காலை உணவு திட்டம் தாமதமாக வரும் மாணவர்களுக்கும் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
தினசரி வாரத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து அறிவுரை வழங்க வேண்டும்.
மேலும் பள்ளி வளாகத்தை தூய்மை செய்தல் மற்றும் நன்னெறி வகுப்புகள் நடத்துதல் போன்றவற்றை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் போன்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.