
புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் அருகே ஒரு வாலிபர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.