தமிழகத்தில் போலியான ஆவணங்களை கொண்டு பலரும் பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் பத்திரப்பதிவு துறையில் முறையான பத்திரங்களை பதிவு செய்ய அசல் சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே பத்திரம் பதிவு செய்யப்படும் என்று சமீபத்தில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிவித்தார். அதே சமயம் போலி ஆவணப்பதிவை குறைப்பதற்காக GPS இயக்கப்பட்ட புகைப்பட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு சார்பில் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் அக்டோபர் 1 முதல் நிலங்களின் புகைப்படம் மற்றும் புவியியல் விவரங்களுடன் பத்திரம் பதிவு செய்யும் நடைமுறை தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய நடைமுறையை தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்ற வேண்டும் எனவும் கூடுதல் வழிகாட்டுதல் பதிவுத்துறை தலைவரால் அலுவலகங்களுக்கு வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.