கடந்த 2012 ஆம் வருடம் தமிழக அரசு பள்ளிகளில் இசை, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் நியமனம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆன நிலையில் தற்போது வரை பகுதி நேர ஆசிரியர்கள் மனம் செய்யப்படவில்லை. இதனை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

மேலும் தங்களுடைய ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். திமுக அரசு தேர்தலின் போது பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தது. இதனை தற்போது வரை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.