திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் 7-ம் வகுப்பு ஆசிரியராக சுந்தர வடிவேலு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அது உண்மை என்று தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் சுந்தரவடிவேலுவை தேடிய போது அவர் தலைமறைவாகி விட்டார். காவல்துறையினர் அவரை வலைவீசி தேடியதில் சொந்த ஊரில் தலைமறைவாகியது தெரியவந்தது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர் சுந்தரவேலுவை கைது செய்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.