இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது கைபேசியில் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலமாக மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும் படி தமிழக காவல்துறை சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக ஒருவர் பேசும் உண்மையான ஆடியோ மற்றும் வீடியோ புகைப்படங்கள் போன்ற மற்றொரு நபர் மூலம் போலியான ஆடியோ வீடியோ மற்றும் புகைப்படங்களை உருவாக்கி ஒருவரது உருவத்தையும் குரலையும் பயன்படுத்தி மற்றொருவர் நடித்து அவரைப் போலவே வீடியோவையும் ஆடியோவையும் உருவாக்க முடியும்.

இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல் ஒருவரின் புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை சமூக ஊடகங்கள் மற்றும் கருப்பு சந்தை உள்ளிட்ட வழிகளில் இருந்து பெற்று அவர்கள் தங்களுக்கு கிடைத்த நபரின் அடையாளங்களை கொண்டு அவரின் பெயரில் போலியான தரவுகளை உருவாக்கி இந்த தொழில்நுட்பம் மூலம் மோசடியில் ஈடுபடுகின்றனர். இது மோசடியில் இருந்து தப்பிப்பதற்கு பொதுமக்கள் தெரியாத எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்கக் கூடாது எனவும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மோசடியில் சிக்கினால் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.