இந்திய குடிமகனாக அங்கீகரிக்கவும், பொதுத்தேர்தலில் வாக்களிக்கவும் மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுவது வாக்காளர் அடையாள அட்டை. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதற்காக 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு புதிதாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

இந்நிலையில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்வது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 21.08.2023 வரை அதிகாரிகள், ஒவ்வொரு வீட்டிலும் வாக்காளர்களின் விவரங்களை சரிபார்த்து குறித்து கொள்வார். அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், ஆதார் எண் இணைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். 18 வயது பூர்த்தி அடைபவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.