தமிழகத்தில் வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி வருகின்ற ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் எனவும் அப்போதே பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அறிவித்துள்ளார். வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணி ஆகஸ்ட் 21 வரை நடைபெற உள்ள நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அனைத்து வாக்காளர்களின் விவரங்களையும் சரிபார்த்து வருகிறார்கள்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்க திருத்தங்கள் மேற்கொள்ள விரும்பும் நபர்கள் அதற்கான பணியை அவரவர் வீட்டுக்கு வரக்கூடிய வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் மேற்கொள்ளலாம். மேலும் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி 18 வயது நிரம்பியவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.