தமிழக கல்வெட்டு தொல்லியல் அறிஞர் ராசு (85) வயது மூப்பின் காரணமாக காலமானார். அறச்சலூர் இசை கல்வெட்டை கண்டுபிடித்து உலகிற்கு தமிழின் பெருமையை எடுத்து சொன்னவர் புலவர் ராசு. கொடுமணல் ரோமானியர்களுடன் தொடர்புடையது என்று அகழ்வாய்வின் மூலம் ராசு கண்டுபிடித்தார். கொங்குநாட்டு வரலாற்றில் சமண சமயம் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர் டாக்டர் ராசு. தமிழுக்கான அவரது தொண்டு எந்நாளும் அவர் பேர் சொல்லும்.