தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மகளிர் அணி சார்பில் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வினாடி வினா போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி www.kalaignar100.co.in என்ற இணையதளத்தில் நடைபெற உள்ளதால் பங்கேற்க 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் 18 வயதை கடந்த என இரண்டு பிரிவுகள் பட்டுள்ளன. அண்ணா பிறந்தநாள் அன்று நடைபெறும் இந்த வினாடி வினாவில் அனைவரும் பங்கேற்குமாறு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.