
தமிழகத்தில் பல பகுதிகளிலும் திடீரென்று செங்கல் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக செங்கல் சூளைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தட்டுபாடு காரணமாக 3,000 செங்கற்கள் கொண்ட ஒரு லோடின் விலை 15,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதனால் தமிழகம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது ஒப்பந்ததாரர்களுக்கு சவாலாக மாறி இருக்கிறது. தமிழகம் முழுவதும் இது கட்டுமானப் பணியில் பாதிப்பையும், சுணக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.