தமிழகத்தில் தோட்டக்கலை துறை சார்பில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்த விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் பங்கேற்கலாம். இந்த திட்டம் மூலமாக பாரம்பரியமான  காய்கறி ரகங்களை மீட்டெடுத்து பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்ப்பது, முறையான மண்வளம் மேம்பாடு அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல்  ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படும்.

இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு முதல் பரிசு ரூ. 15000 மற்றும் இரண்டாம் பரிசு ரூ.10000 வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் வழிகாட்டு நெறி முறைகள் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தில்  தெரிந்துகொள்ளலாம்.  விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பூர்த்தி செய்து வட்டார தோட்டக்கலை அலுவலகங்களில் செப்.30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.