தமிழகத்தில் கருக்கலைப்பில் ஈடுபடுவது சட்டவிரோதம் இல்லை என்றாலும் கருவில் இருப்பது ஆணா மற்றும் பெண்ணா என கண்டறிந்து அதன் பிறகு கருக்கலைப்பில் ஈடுபடுவது குற்றம்தான். தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஸ்கேன் பரிசோதனை மையங்களில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபடும் சம்பவம் நடைபெற்ற வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் பரிசோதனை மையங்களில் குழந்தை ஆணா பெண்ணா என ஸ்கேன் செய்து கூறுவது தண்டனைக்குரிய குற்றம் என்ற பலகை அமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இது தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இது போன்ற தவறுகளை கண்டறிந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொடர்ந்து ஸ்கேன் பரிசோதனை மையங்கள் கண்காணிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.