தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 9-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனவரி 10ஆம் தேதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திரிந்த நிலையில் பின்னர் ஜனவரி 11ஆம் தேதி தான் கனமழை பெய்யும் என்று கூறியது.

அதன்படி ஜனவரி 11ஆம் தேதி புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு இன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது. காலை வேலைகளில் லேசான பனிமூட்டம் காணப்படுவதோடு நீலகிரியில் இரவு நேரத்தில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது.