தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு காலை உணவு திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட்ட நிலையில் இன்று சட்டசபை கூட்டத்தொடரின் போது காலை உணவு திட்டம் குறித்து அமைச்சர் கீதா ஜீவன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதாவது காலை உணவு திட்டத்தினால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை என்பது அதிகரித்துவிட்டது. குழந்தைகளின் ஊட்டச்சத்து என்பது அதிகரித்துள்ளது. குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளனர். எனவே இனி வருகிற கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் உப்புமாவுக்கு பதில் சாம்பாருடன் கூடிய பொங்கல் வழங்கப்படும் என்று கூறினார். மேலும் அரசு பள்ளிகளில் இனி பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தது வரவேற்பை பெற்றுள்ளது.
