பருவமழை தாமதத்தால் சாகுபடி குறைந்துள்ளதால் நாடு முழுவதும் வெங்காயம், தக்காளி விலை அதிகரித்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25 முதல் ரூ.30 வரை விலை போன நிலையில், தற்போது ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. மறுபுறம், ஒரு கிலோ தக்காளியின் விலை 15இல் இருந்து 30 ஆக அதிகரித்துள்ளது.

வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ எட்டவும் வாய்ப்புள்ளது. வெங்காயம், தக்காளி விலை மட்டுமல்லாது மற்ற காய்கறிகளின் விலையும் கடந்த 10 நாட்களை ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளது சாமானியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.