தமிழகத்தில் வேளாண் துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தையும் விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ள உழவன் செயலியை அரசு அறிமுகப்படுத்தியது. இந்த செயலி மூலமாக விவசாயிகள் பெரிய அளவில் லாபம் அடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விதை பண்ணை அமைக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இந்த திட்டத்தின் படி ஒரு விவசாய குடும்பத்திற்கு அதிகபட்சமாக நெல்லுக்கு 5 ஏக்கரும், இதர பயிர் விதைகளில் 12.5 ஏக்கரும் விதைப்பண்ணையாக பதிவு செய்ய முடியும். விதை உற்பத்தி செய்து சுத்திகரிப்பு நிலையத்தில் இருப்பு வைத்ததும் குறைந்தபட்ச ஆதார விலையில் 80 சதவீதம் தொகை பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் உழவன் செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் இது குறித்த விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.