
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் கிராமப்புறங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சொத்து, தொழில் வரி, குடிநீர் கட்டணம், மனைப் பிரிவு அனுமதி, கட்டட அனுமதி போன்ற மக்கள் நலன் சார்ந்த அரசு சேவைகளை இணையதளம் மூலம் பெற வசதி செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கிராமங்களில் வளர்ச்சிக்காக சிறப்பான பல வளர்ச்சி திட்டங்களை முதல்வர் செய்து வருவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.