தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வரும் நிலையில் இனிவரும் நாட்களில் பண்டிகை காலம் வருவதால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவதற்கு தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதற்காக நுகர் பொருள் வாணிப கழகம் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு, ஒரு லிட்டர் பாக்கெட் கொள்ளளவில் ஆறு கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

அதேசமயம் பொதுமக்களின் நன்மைக்காகவும் வசதிக்காகவும் இன்னும் இரண்டு மாதங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி மூலம் ரேஷன் வாங்கும் திட்டம் அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து அதன் மூலம் ரேஷன் பொருட்களை பெறுவதற்கான அரசாணை வெளியிடப்பட்ட டெண்டர் விடப்பட உள்ளது. விரைவில் இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தமிழகத்தில் முதன்முறையாக கருவிழி பதிவு செய்யும் நடைமுறை 36,000 ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.