தென்மேற்கு வங்க கடல் மற்றும் கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடலின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தமிழ்நாட்டில் வருகிற 17-ம் தேதி வரை மலைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.