தமிழகத்தில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு களஞ்சியம் செயலி கட்டாயம் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது பள்ளிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை மற்றும் இதர பலன்களைப் பெற களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த செயலியை பயன்படுத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியான போதிலும் அதனை முழுமையாக பயன்படுத்தவில்லை என்று கருவூல கணக்குத் துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது களஞ்சியம் செயலி கட்டாயம் என்ற உத்தரவு வெளியாகியுள்ளது.

அதன்படி பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணி புரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று முதல் விடுமுறை, ஓய்வூதிய பலன்கள் பெற, பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கருத்துரு அனுப்ப, அனைத்து வகையான முன்பணம், சம்பள சான்று பெற போன்றவைகளுக்கு இந்த செயலியை இன்று முதல் பயன்படுத்துவது கட்டாயம்.

இதன் மூலம் களஞ்சியம் செயலி என்பது 100% பயன்படுத்தப்படும். மேலும் இனிவரும் காலங்களில் களஞ்சியம் செயலியின் பயன்பாட்டை இன்னும் அதிகப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் விடுமுறை உள்ளிட்ட இதர பலன்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் களஞ்சியம் செயலி மூலமாக மட்டும்  விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.