தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தில் அதா சர்மா நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது படத்தில் இந்துவாக இருந்த தன்னை முஸ்லிம் மதத்திற்கு கட்டாயம் மதமாற்றம் செய்து ஆப்கானிஸ்தான் சிறையில் அடைத்து தன்னை ஒரு ஐஎஸ் பயங்கரவாதியாக மாற்றிவிட்டதாக ஹீரோயின் கூறுகிறார்.   இந்த படம்  கேரள மாநிலத்தை தவறான முறையில் சித்தரிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில்  இயக்குநர் சுதீப்டோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இன்று வெளியாக உள்ளது. படம் தமிழகத்தில் வெளியானால் பிரச்சனை எழ வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து இப்படம் தமிழகத்தில் வெளியாகும் திரையரங்குகளில் உரிய பாதுகாப்பு வழங்கும்படி டிஜிபி சைலேந்திரபாபு காவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கப்படும் என தெரிகிறது.