தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியாகினார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதற்கு  திமுக அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று ADMK குற்றம்சாட்டியிருந்தது. அதோடு, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் அதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என EPS அறிவித்துள்ளார். அதன்படி இன்று  ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.