தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை தனியார் துறை நிறுவனத்துடன் சேர்ந்து மாவட்டம் தோறும் நடத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக 100 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து இடங்களிலும் வேலை வாய்ப்பு முகாமை நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் வருகின்ற ஆகஸ்டு 19ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ள நிலையில் இந்த முகாமில் 250க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த முகாமில் 40 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ள நிலையில் விருதாச்சலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மூன்று மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே வேலை இல்லாத இளைஞர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.