தமிழகத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் எப்படி ஆடை அணிய வேண்டும் என்று பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் மாணவர்களுக்கு முன் உதாரணமாக ஆசிரியர்கள் இருப்பதால் அவர்களின் ஆடை என்பது முக்கியமான ஒன்று என அரசு தெரிவித்துள்ளது. இருந்தாலும் அனைவரையும் போல எங்களுக்கும் ஆடை சுதந்திரம் வேண்டுமென்று ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இது தொடர்பாக பள்ளி கல்வி இணை இயக்குனர் அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆண் ஆசிரியர்கள் தமிழ்நாடு இந்திய கலாச்சாரத்தை க்கும் விதமாக ஆடை அணியலாம் என்றும் மகளிர் அரசு ஊழியர்கள் அல்லது ஆசிரியர்கள் சல்வார் கமீஸ் மற்றும் துப்பட்டா உடன் கூடிய சுடிதார் அணியலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த உத்தரவை பின்பற்ற அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடக்கோரி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.