இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் வரவேண்டிய அகலவிலைப்படி மே மாதம் வழங்கப்பட்டது. அதுவும் ஏப்ரல் 1ஆம் தேதி முன் தேதியிட்டு  நான்கு சதவீதம் உயர்வு பெற்றது. தற்போது அரசு ஊழியர்கள் 42 சதவீதம் அகலவிலைப்படி பெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக ஜூலை மாதத்திற்கான அகல விலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

அடிக்கடி கிடைத்த தகவலின் படி அக்டோபர் மாதத்தில் மத்திய அரசு அகலவிலைப்படியை  உயர்த்தும் என்றும் அதனை தொடர்ந்து தமிழக அரசிடம் இது குறித்து அறிவிப்பை வெளியிடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் தீபாவளி வர உள்ள நிலையில் அதற்கு முன்னதாக அகலவிலைப்படி உயர்த்தப்படும் என்று தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.. இருந்தாலும் தமிழக அரசு அதைப்பற்றிய எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில் ஆறு மாத கால அவகாசம் முடிய உள்ளதால் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.