தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானிய தொகை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான பராமரிப்பு மானியம் நடப்பு ஆண்டில் நிதி ஒதுக்கீடு பகிர்வு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசு நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு குறித்த காலத்தில் கற்பித்தல் மற்றும் பராமரிப்பு மானியத்தை வழங்க வேண்டும்.

அதற்கான ஆய்வு பணிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். நிரந்தர அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் நான்கு வகை சான்றிதழ்களையும் நிகழாண்டு வரை பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு பெற்ற பிறகு கற்பித்தல் மானியம் குறித்த ஆணை பிறப்பிக்க வேண்டும். சுயநிதி பிரிவு மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கு மானியம் எதுவும் வழங்கக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.