
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இணைய வசதி ஏற்படுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க , நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இணைய வசதியை ஏற்படுத்த தமிழக அரசு முயற்சி எடுத்துள்ளது. பிஎஸ்என்எல் மூலம் இணைய இணைப்பு வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதால் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.