
தமிழகத்தில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்படுத்த வேண்டும் என்பதில் அரசு தற்போது மும்முரம் காட்டி வருகிறது. அதே சமயம் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கவும் அரசு பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 37,062 அரசு பள்ளிகளிலும், பள்ளி மேலாண்மை குழுவை மறு கட்டமைப்பு செய்வதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று 12,117 அரசு தொடக்கப் பள்ளிகளில் SMC மறு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 17, 24,31 ஆகிய தேதிகளில் மீதமுள்ள பள்ளிகளில் மறு கட்டமைப்பு செய்யப்பட உள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் மேம்பாட்டுக்காக பெற்றோர் உள்ளிட்டோர் அடங்கியது பள்ளி மேலாண்மை குழு ஆகும்.