
தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாகவே பல மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து கொண்டிருக்கிறது. வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் சூழலில் மழை பெய்து மக்களை சற்று குளிரூட்டி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.