தமிழகத்தில் கோடைக்காலம் நெருங்கி கொண்டிருப்பதால் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கிவிட்டது. இந்நிலையில் வானிலை நிலவரம் தொடர்பான அறிவிக்கையை சென்னை வானிலை மையமானது வெளியிட்டு உ ள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது. அதன்பின் இன்றும், நாளையும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள கன்னியாகுமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.