தமிழகத்திலேயே முதல் முறையாக குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 சர்க்கரை நோய்க்கான பிரத்தியாக பதிவேடு உருவாக்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். குழந்தை பருவத்தில் ஏற்படும் சர்க்கரை நோய்க்கான சிகிச்சை மற்றும் வேளாண்மை நடவடிக்கைகளுக்கான தகவல் பதிவேடு தமிழகத்திலேயே முதல் முறையாக நடப்பு ஆண்டில் உருவாக்கப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மருத்துவர்களை சந்திப்பதற்கு முன்பாக அவர்களின் உயரம், எடை, நாடித்துடிப்பு, ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு ஆகியவை பரிசோதித்து அறிக்கையாக வழங்கப்படும். மேலும் மருத்துவமனைகளில் தூய்மை பணியாளர்கள் 24 மணி நேரமும் துப்புரவு பணியில் ஈடுபட்டு நோய் தொற்றை குறைக்கின்றனர். எனவே அவர்களின் பணியிட நலன் கருதி அனைத்து மருத்துவமனைகளிலும் அவர்களுக்கு தனி அறை அமைத்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.