தமிழகத்தில் வளர் இளம் பருவத்தினரின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் 25,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 10 முதல் 19 வயது வரை உள்ள வளர் இளம் பருவத்தினருக்கு மாதம் தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

அங்கு சுகாதார ஆலோசனைகள், விழிப்புணர்வு மற்றும் ரத்தசோகை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். சிறுநீரில் வெளியேறும் புரதத்தின் அடிப்படையில் ஆரம்ப நிலையிலையே சிறுநீரக செயலிழப்பை கண்டறியும் பரிசோதனைகள் அனைத்து சுகாதார நிலையங்களிலும் 2 கோடியில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.