தமிழக அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா. தலைமைத்துவ விருது மற்றும் பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கும் விழா நடைபெற்றது இதில் பங்கேற்ற  அமைச்சர் அன்பில் மகேஷ் விருதுகளை வழங்கிய பிறகு  தமிழக அரசு பொறுப்பேற்று பிறகு கல்வித்துறைக்கு மட்டும் ஒரு லட்சத்து 57 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் 3521 வகுப்பறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி பள்ளிக்கல்வித்துறையை உயர்த்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் தங்களுடைய அரசு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் .புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் சேரும் மாணவர்களுடைய சதவீதம் 34% அதிகரித்துள்ளதாகவும் தமிழகத்தில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை செயல்படுத்தப்படாது எனவும் தெரிவித்து உள்ளார்.