
நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நரேந்திர மோடி இன்று 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்கிறார். இவருடன் 15 மத்திய அமைச்சர்களும் பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இன்று நரேந்திர மோடி கொடுக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்பவர்கள் பிரதமராக பொறுப்பேற்பார்கள் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் நரேந்திர மோடி கொடுத்த தேநீர் விருந்தில் இன்று தமிழகத்தை சேர்ந்த எல். முருகன், ஜெய்சங்கர் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதனால் இவர்கள் மூவருக்கும் மத்திய அமைச்சரவை பதவி உறுதியாகியுள்ளது. மேலும் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அண்ணாமலை ஆகியோருக்கு மத்திய அமைச்சரவை பதவி வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் அந்த தகவலில் உண்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.