பாஜகவின் மாநில தலைவர்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் அண்ணாமலை பொறுப்பேற்று ஒரு வருடம் 7 மாதம் ஆகியுள்ள நிலையில் பல்வேறு ஊர்களில் பல்வேறு விதமான நிகழ்வுகளில் பங்கேற்றாலும் அவருடைய சுற்றுப்பயணம் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த மாதம் திமுகவினுடைய மூத்த தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் முதலமைச்சருடைய குடும்ப உறுப்பினர்கள் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இப்படி பரபரப்பு கிளப்பி விட்டு கர்நாடக தேர்தலிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார் அண்ணாமலை.

இந்த சூழலில் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவையும், ஜே பி நட்டாவையும் சந்தித்து பேசி இருந்தார். இந்த சந்திப்பானது அதிமுக பாஜக இடையேயான கூட்டணியை உறுதி செய்திருப்பதாகவே கருதப்படுகிறது ஆகையால் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் ஜூன் முதல் வாரம் முதல் அண்ணாமலை சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார்.